என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விழுந்து நொறுங்கியது
நீங்கள் தேடியது "விழுந்து நொறுங்கியது"
ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் இன்று எம்.ஐ.ஜி.27 ரகப் போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #IAFaircraft #MiG27aircraft #MiG27crashes
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை எம்.ஐ.ஜி.27 ரகப் போர் விமானம் புறப்பட்டு சென்றது.
பயிற்சியின் இடையில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் செங்குத்தாக கீழ்நோக்கி பாய்ந்து சிரோஹி மாவட்டத்தில் உள்ள கோடானா கிராமத்தில் ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
போர் விமானம் தரையில் மோதுவதற்குள் அதில் இருந்த விமானி பாரசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டில் ஒன்பதாவது முறையாக பயிற்சியின்போது போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #IAFaircraft #MiG27aircraft #MiG27crashes
ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். #IAFJetCrashes
ஸ்ரீநகர்:
அதன்பின்னர் பாகிஸ்தான் படைகள் எல்லைப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டு, பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. பத்காம் விமான நிலையத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும், விமானத்தில் பயணித்த 2 விமானிகள் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. #IAFJetCrashes
காஷ்மீரில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் எல்லையில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டது. ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர் பாகிஸ்தான் படைகள் எல்லைப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டு, பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. பத்காம் விமான நிலையத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும், விமானத்தில் பயணித்த 2 விமானிகள் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. #IAFJetCrashes
உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில், பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். #IAF-AircraftCrashes
கோரக்பூர்:
ஆனால், விமானம் தரையில் விழுந்தவுடன், விமானி சாமர்த்தியமாக வெளியே குதித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #IAF-AircraftCrashes
உத்தர பிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டம், கோரக்பூரில் இந்திய விமானப்படை வீரர்கள் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில், கோரக்பூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜாகுவார் போர் விமானம், சிறிது நேரத்தில் ஹதேம்ர் பகுதியில் விபத்துக்குள்ளானது. தரையில் மோதியதும் விமானம் தீப்பிடித்தது.
ஆனால், விமானம் தரையில் விழுந்தவுடன், விமானி சாமர்த்தியமாக வெளியே குதித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #IAF-AircraftCrashes
பல்கேரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் 2 பைலட்கள் பலியாகினர்.
சோபியா:
பல்கேரியா நாட்டின் குருமோவோ விமானப் படைத்தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
தென் பகுதியில் அமைந்துள்ள ப்ளோவ்டிவ் நகரின் மேலே பறந்தபோது ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து அது கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 2 பைலட்களும் பரிதாபமாக பலியாகினர். மேலும், விமான நிறுவன ஊழியர் ஒருவரும் படுகாயம் அடைந்தார். விமான விபத்து ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #Tamilnews
×

X